Goldstars News

வங்கதேசத்தில் ஒரே நாளில் 3,187 பேருக்கு கொரோனா

news-image

டாக்கா:வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் நேற்று ஒரே நாளில் 3,187 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 78,052 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 37 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,049 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.