Goldstars News

ஒரேநாளில் 427 பேர் பலி ! கொரோனாவினால் உயிரிழந்தோர் தொகையில் சீனாவை முந்தியது இத்தாலி

news-image

கொவிட் - 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 

அந்த வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

தற்போது இத்தாலியில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3405 ஆக உயர்ந்துள்ளது.  

இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இதுவரை 3245 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.  ஆனால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

இத்தாலி கடந்த  12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை முடக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளார்கள். 

ஆனாலும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில் தற்போது 245,613 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 10,048 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88,437 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.