Goldstars News

சிறுவர்களிற்கு பாதிப்பு குறைவு- கைக்குழந்தைகளிற்கு ஆபத்து அதிகம்

news-image

முதியவர்களிற்கு ஆபத்தானதாக காணப்படும் கொரோனா வைரசினால் சிறுவர்களிற்கு பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என மற்றுமொரு ஆய்வும் உறுதி செய்துள்ளது.

ஜேர்னல் ஒவ் பீடீயாட்ரிக்ஸ்  journal Pediatrics,  என்ற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது

சீனாவில் 2143 சிறுவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் மத்தியில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவானதாகவே காணப்படுகின்றது என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களில் 90 வீதமானவர்கள் சிறிதளவு நோய் தொற்றையே வெளியிட்டுள்ளனர், சிலரிடம் நோய் தொற்று அறிகுறிகள் தென்படவில்லை.

எனினும் கைக்குழந்தைகள் நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகயிருக்கலாம் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்காயின் சிறுவர் மருத்துவ நிலையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான இரு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது சிறிதளவு நோய் தொற்றிற்கு ஆளாகியுள்ள சிறுவர்களில் ( 52) குளிர் காய்ச்சல்,சோர்வு இருமல், தொண்டை நோய்,தும்மல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

மிதமான தொற்று காணப்பட்டவர்கள்( 39) காய்ச்சல் இருமலுடன் நிமோனியா இருமல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்( 5)தொடர்ச்சியான காய்ச்சல் இருமல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான நோய் பாதிப்பு என்பது சுவாசப்பிரச்சினையுடனேயே ஆரம்பித்துள்ளது,இரப்பை குடல் பிரச்சினைகளும் காணப்பட்டுள்ளன,ஒருவாரத்;தின் பின்னர் சிறுவர்கள் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,அதன் பின்னர் அந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

பெப்ரவரி 14 ம் திகதி 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இதேவேளை இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் -ஏழு கைக்குழந்தைகள் குறித்தும் 1முதல் ஐந்து வயதுடைய இரு பிள்ளைகள் குறித்தும் விசேடமாக கவனம் செலுத்தியுள்ளனர், இவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளது.

குழந்தைகள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என ஆய்வை மேற்கொண்டவர்கள் எழுதியுள்ளனர்.

வைரஸ் தாக்கம் சிறுவர்கள் மத்தியில் கடுமையானதாகயில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள இரு மருத்துவர்களும் வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் சிறுவர்கள் வீடுகளிலேயே இருந்திருக்கலாம் இதனால் நோய் தொற்றிற்கு உள்ளாவதிலிருந்து தப்பியிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.