Goldstars News

கொரோனாவினால் முடங்கியுள்ள பல உலகநாடுகளின் போக்குவரத்து நடவடிக்கைகள்

news-image

சீனாவின் வுஹானில் ஆரம்பித்த கொரோனா என்றும் கொள்ளை நோய், இன்று உலகையே ஆக்கிரமித்துள்ளது. இதனால் உலகின் பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதைவிட பல மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலகநாடுகள் பல போக்குவரத்து மற்றும் விமான சேவைகளை தடை செய்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் : 

ஐரோப்பிய தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் அனைத்து அத்தியாவசியமற்ற பயணத்துக்கு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.

 

ஐக்கிய அமெரிக்கா:

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்து வருவோர்களுக்கான பயணம் இடை நிறுத்தப்பட்டது. அத்துடன் 26 ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோருக்கும், ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து வருவோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அவுஸ்திரேலியா: 

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அனைத்து பயணிகளையும் கட்டாயம் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறு அந் நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கடந்த 14 நாட்களில் சீனா, ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு பயணித்தவர்களுக்கு அவுஸ்திரேலியா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கம்போடியா :

இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெய்ன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு மார்ச் 17 முதல் அடுத்த 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கனடா :

கனேடியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர கனடா குடியிருப்பாளர்களை தவிர ஏனைய அனைவருக்கும் கனடாவுக்குள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

கேப் வர்டி :

மார்ச் 17 முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு போர்த்துக்கல் மற்றும் கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, பிரேஸில், செனகல் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீனா: 

பீஜிங்கிற்கு செல்லும் அனைத்து பயணிகளையும் கட்டாயம் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரான், இத்தாலி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து பீஜிங், குவாங்சோ மற்றும் ஷாங்காய் ஆகிய சீனாவின் நகரங்களுக்கு செல்வோரையும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர ஷாங்காய் 12 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அந்த நாடுகளிலிருந்து பயணிகளையும் 14 நாட்களுக்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கொலம்பியா: 

கொலம்பிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லது இராஜதந்திரிகள் அல்லாதவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

செக் குடியரது:

சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கு தடை. 

இவேதளை கெரோனா பரவல் அதிகமாக காணப்படும் நாடுகளுக்கு வெளிச்செல்லும் பயணமும் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

எகிப்து:

மார்ச் 19 ஆம் திகதியிலிருந்து எகிப்திய விமானங்களுக்கு உட்புகவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஜேர்மன்:

ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லக்சம்பேர்க் மற்றும் டென்மார்க் ஆகியவற்றுடன் ஜேர்மனின் போக்குவரத்து நடவடிக்கை துண்டிக்கப்பட்டுள்ளது.

 

ஹெய்டி:

மார்ச் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஹெய்டி ஐரோப்பா, கனடா, டொமினிக்கன் குடியரசு மற்றும் லத்தீன் அமெரிக்காவுக்கிடையிலான விமன சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

மார்ச் 16 ம் தேதி நள்ளிரவு தொடங்கி, ஹைட்டி ஐரோப்பா, கனடா, டொமினிகன் குடியரசு மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து இரண்டு வாரங்களுக்கு விமானங்களை நிறுத்தி வைக்கிறது.

 

ஹொங்கொங்:

மார்ச் 19 முதல் ஹொங்கொங்கிற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குடுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஹங்கேரி: 

தனது பிரஜைகளை தவிர ஏனையவர்களுக்கு ஹங்கேரிக்குள் நுழைய தடை

 

இந்தியா:

ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து சுற்றுலா விசாக்களும் இடைநிறுத்தப்பட்டு, அனைத்து பயணிகளுக்கும் 14 நாள் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

ஜப்பான்:

கடந்த 14 நாட்களுக்குள் சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு பயணித்தோருக்கு ஜப்பான் நுழைய அனுமதி மறுப்பு.

 

மலேசிய:

மலேசிய பிரஜைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையோருக்கும் மலேசியா நுழைய தடை.

 

மொராக்கோ: 

மறு அறிவித்தல் வரை அனைத்து விமானங்களுக்கும் மொரோக்கோ செல்வதற்கு தடை.

 

நியூஸிலாந்து :

நியூஸிலாந்து பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து பயணிகளும் நாட்டிற்குள் நுழையும்போது 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

பேரு:

மார்ச் 16 இலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

பிலிப்பைன்ஸ்:

செபு பசுபிக் ஏயர்லைன்ஸ் மார்ச் 19 முதல் ஏப்ரல் 14 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகைள இரத்து செய்துள்ளது. 

இதவேளை லூசனில் அனைத்து பொதுப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

சவுதி அரேபியா: 

சவுதி நாட்டினைத் தரவி கடந்த 14 நாட்களில் கொரோனா தொற்றினால் அதிகளவாக பாதிக்கப்பட்ட 30 நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு உள் நுழை அனுமதி மறுப்பு.

 

தென் கொரியா:

கடந்த 14 நாட்களில் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வருவோருக்கும், அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த கடவுச் சீட்டுகளை வதை்திருப்போருக்கும் உள் நுழைய அனுமதி மறுப்பு.

 

ஸ்பெய்ன்:

ஸ்பெயினில் ஏற்கனவே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினுக்குச் செல்லும் பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

 

பொலிவியா:

பொலிவியாவிற்கான சர்வதேச மற்றும் தேசிய விமானங்கள் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படவுள்ளன. பொலிவிய குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் எல்லைகள் வியாழக்கிழமை முதல் மூடப்படும்.

 

தாய்லாந்து:

ஹொங்கொங், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான பயணிகளுக்கான விசா விலக்கு கொள்கைகளை இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 18 நாடுகளுக்கான விசா நிறுத்தப்பட்டுள்ளது. 

துருக்கி:

ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, நோர்வே, டென்மார்க், சுவீடன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய 9 ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 

அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.