Goldstars News

100 ஆண்டுகளின் பின்னர் மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

news-image

கொரோனா வைரஸ் உலகை அச்சத்திற்குள்ளாக்கியதன் காரணமாக 100 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம், மூடப்படவுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துடன் ஒரு லட்சத்துக்கு 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் அமெரிக்காவிலும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், 100 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் கூறும்போது, ''கோவிட் 19 காய்ச்சல் பரவி வருவதை அடுத்து வழக்கு விசாரணைகளை நீதிமன்றம் தள்ளி வைப்பதாகவும், இந்த தடை மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை இது அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

பொது சுகாதாரம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1918-ல் உலகளாவிய அளவில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் மூடப்பட்டது. அதன் பின்னர் 102 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் மூடப்படுகிறது.

எனினும் வழக்கமான அலுவல் வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளின் சராசரி வயது 67 ஆகும். இதில் இரண்டு நீதிபதிகள் 80 வயதுக்கும் மேற்பட்டோராக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.