Goldstars News

சீன வைரஸ் என்றார் டிரம்ப்: சர்ச்சையானது கருத்து

news-image

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.


கொரோனா என்ற தொற்று முதன் முதலில் சீனாவில் இருந்து பரவியது. அமெரிக்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் இறந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட சமீபத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது டுவிட்டரில்;


குறிப்பாக "சீன வைரஸால் " பாதிக்கப்பட்டுள்ள ஏர்லைன்ஸ் மற்றும் பிற தொழில்களை கொண்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா அதீத முறையில் ஆதரவு அளிக்கும். முன்பை விட நாம் பலமாக இருப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.