Goldstars News

உயிர் பலியை மறைக்கும் நாடுகள்: உலக சுகாதார அமைப்பு கண்டனம்

news-image

கொரோனா தொற்று பரவல் குறித்து, ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:


நேற்றைய (16ம் தேதி) நிலவரப்படி, 151 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. கொரோனாவால், 6,606 பேர் பலியாகி உள்ளனர்; 1,67,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
உலக அளவில் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. அதனால் தான் நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிவிரைவாக கொரோனா பரவி வருகிறது.