Goldstars News
பிரதான செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன!

news-image

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியன் பிறீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது ஐ.பி.எல். போட்டிகளானது இம் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.

எனினும் கொரோனா தொடர்பில் எழுந்த அச்சம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பி.சி.சி.ஐ. தற்போது முடிவெடுத்துள்ளது.