Goldstars News

ஒத்திவைக்கப்பட்டது இலங்கை -இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

news-image

இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள எங்கள் அணியினருக்கும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொடரை ஒத்திவைப்பதுடன் இங்கிலாந்து அணி வீரர்களை நாட்டிற்கு திருப்பி அழைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் தொடரை முன்னெடுப்பதே எங்கள் நோக்கம் என இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தீவிரமடைவதன் காரணமாக,இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளி;ன் பி;ன்னரும் நாங்கள் எங்கள் வீரர்களைநாட்டிற்கு அழைப்பது எனவும் தொடரை ஒத்திவைப்பது எனவும் தீர்மானித்துள்ளோம் என இங்கிலாந்து கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எப்போதும் எங்கள் வீரர்களின் பயிற்சியாளர்களின் உடல்உளநலமே முக்கியமானது என குறிப்பிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரி அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு மீண்டும் செல்வதற்கும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி பயிற்சி போட்டியில் ஈடுபட்டிருந்தவேளையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.