Goldstars News

சிரியாவில் விமானதாக்குதல்- ஈரான் ஆதரவு அமைப்பை சேர்ந்த 25 பேர் பலி

news-image

சிரியாவில் இன்று இடம்பெற்ற விமானதாக்குதல்களில் ஈரான் ஆதரவு குழுக்களை சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் உள்ள இராணுவமுகாமொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் அமெரிக்க பிரிட்டிஸ் படையினர் கொல்லப்பட்ட பின்னர் இந்ததாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அபுகமால் நகரத்திற்கு அருகில் உள்ள ஆயுதக்குழுக்களின் முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் எந்த நாடு இந்த தாக்குதலை மேற்கொண்டது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

ஈராக் தலைநகரில் உள்ள இராணுவமுகாமொன்றின்  மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் இரு அமெரிக்க இராணுவத்தினரும் ஒரு பிரிட்டிஸ் படைவீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக 18 பேர் காயமடைந்துள்ளனர்.

தாஜி இராணுவமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட 18ற்கும் மேற்பட்ட சிறிய ரக ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக பல படையினர் காயமடைந்துள்ளனர்.

பலர் கடுங்காயங்களிற்கு உள்ளாகியுள்ளதால் மேலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாஜி இராணுவமுகாம் மீது தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஈரான் ஆதரவு ஆயுதகுழுக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டமை உறுதியானால் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை உருவாகலாம