Goldstars News

ஈரானில் ஒரே நாளில் 54 பேரை காவு வாங்கிய கொரோனா

news-image

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர் பலியானார்கள். இது அந்நாட்டில், ஒரு நாளில் பலியானவர் எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ், உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 291 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்து, ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பை அந்நாடு பதிவு செய்துள்ளது. இதுவரை 8,042 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர்; கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 881 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது. அதிகபட்சமாக தலைநகர் தெஹ்ரானில் 2,114 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.