Goldstars News

கொரோனா ஆபத்தான வைரஸ் நிபுணர் கருத்து

news-image

தான் ஆய்வு செய்த நோய்களில் கொரோனாவே மிகவும் ஆபத்தானது என கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் டாக்டர் ரிச்சர்ட் ஹாட்செட் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 3,100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். வைரசை தடுக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்த்தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும், பிரிட்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஹாட்செட், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பல நிபுணர்களில் ஒருவராவார்.

இவர், தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வகத்தின் (சிஇபிஐ) தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், உலக சுகாதார மையம் அறிவுறுத்திய தடுப்பு நடவடிக்கைகள் மூலமே கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். எபோலா மற்றும் நிபா போன்ற வைரஸ்கள் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் தொற்று கொரோனா அளவிற்கு இல்லை.
நான் ஆய்வு செய்ததில் ஆபத்தான வைரஸ் கொரானாவே, என்றார். இவரது சிஇபிஐ நிறுவனத்திற்கு கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ரூ.200 கோடியை பிரிட்டன் அரசு வழங்கியுள்ளது.