Goldstars News
பிரதான செய்திகள்

நம்பிக்கையை இழக்கவேண்டாம் - ஒருநாள் சாதிப்பீர்கள்- இந்திய மகளிர் அணிக்கு சச்சின் - விராட் கோலி செய்தி

news-image

மகளிர் அணி குறித்து இந்தியா பெருமிதம் கொள்கின்றது என தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் ஹர்மன்பிரீட் ஹவுர் தலைமையிலான இந்திய அணியை நம்பிக்கை இழக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

t20  மகளிர் உலக கிண்ணத்தின் பின்னர் டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் இதனை பதிவு செய்துள்ளார்.

t 20  உலக கிண்ணத்தை வென்றமைக்காக அவுஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது இந்திய அணிக்கு கடினமான நாளாக காணப்பட்டது என தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் எங்கள் அணி இளைய அணி அது வலுவான அணியாக வளர்ச்சிபெறும் என தெரிவித்துள்ளார்.

உலகில் பலரிற்கு நீங்கள் உந்துசக்தியாக விளங்குகின்றீர்கள் நாங்கள் உங்கள் அணி குறித்து பெருமிதம் கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கடினமாக முயற்சி செய்யுங்கள் நம்பிக்கையை ஒரு போதும் இழக்கவேண்டாம் எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் நீங்கள் சாதிப்பீர்கள் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விராட்கோலியும் இதுபோன்றதொரு கருத்தை பதிவு செய்துள்ளார். 

இந்திய மகளிர் அணி குறித்து பெருமிதம் அடைகின்றேன்,முன்னரை விட வலிமையுடன் நீங்கள் மீண்டும் சாதிப்பீர்கள் என நம்பிக்கை கொண்டுள்ளேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.