Goldstars News
பிரதான செய்திகள்

மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் வாணவேடிக்கை நிகழ்த்திய ஹீலி

news-image

அவுஸ்திரேலியாவிற்கு மகளிர் உலக கிண்ணத்தை வென்று கொடுத்துள்ள அலீசா ஹீலி  தனது குடும்பத்தின் சாதனைகளை தொடர்ந்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 39 போட்டிகளில் 75 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியாவிற்கு அதிரடி ஆரம்பத்தை வழங்கினார் ஹீலி.

சர்வதேச மகளிர் தினத்தன்று மெல்பேர்ன் மைதானத்தில் திரண்டிருந்த 80,000ற்கும் அதிகமான ரசிகர்கள் மத்தியில் அவர் இந்த வாணவேடிக்கையை நிகழ்த்தினார்.

அவரது கணவரான அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஸ்டார்க்கும் அந்த பார்வையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிச்செல் ஸ்டார் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகி தனது மனைவி விளையாடுவதை பார்ப்பதற்காக மெல்பேர்ன் சென்றிருந்தார்.

இதேமைதானத்திலேயே 2015 இல் மிட்செல் ஸ்டார்க் உலக கிண்ண இறுதிப்போட்டியில் நியுசிலாந்தின் பிரென்டன் மக்கலத்தை ஆரம்பத்திலேயே வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.

ஹீலியின் துடுப்பாட்டத்தை ரசித்தவர்களில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட்காப்பாளரும் ஹீலியின் நெருங்கிய உறவினருமான இயன் லீலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குடும்பத்தில் யாரின் கைகள் ஓங்கியுள்ளன என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்த வித தயக்கமும் இன்றி எனது கையே ஓங்கியுள்ளது என ஹீலி தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணத்தை வென்ற பல அவுஸ்திரேலிய மகளிர் அணிகளில் நான் இடம்பெற்றிருக்கின்றேன் ஆனால் சொந்த மண்ணில் வெல்வது விசேடமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் நானும் மிச்செல் ஸ்டார்க்கும்1-1 என்ற அடிப்படையில் உள்ளோம.; என அவர் தெரிவித்துள்ளார்.