Goldstars News

சிங்கப்பூரில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது- அதிகாரி தகவல்

news-image

கொரோனாவைரஸ் காரணமாக சிங்கப்பூரில்  மரணங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத விடயம் என வைரசிற்கு எதிரான நடவடிக்கைளை ஒருங்கிணைக்கும் செயலணியின் தலைவர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பமான கொரோன வைரஸ் சர்வதேச நோய் தொற்றாக மாறத்தொடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எங்களை பாதுகாப்பாக மூடிவைத்திருப்பது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏதோ ஒரு தருணத்தில் நாங்கள் உயிரிழப்புகளை சந்திப்பது தவிர்க்க முடியாத விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்கு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இரண்டு மாதங்கள்கடந்துள்ள நிலையில் 100ற்கும் குறைவானவர்களே இதுவரை சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிங்கப்பூரில் இன்னமும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.