Goldstars News

அடுத்த குளிர்காலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கலாம் - அமெரிக்க இராணுவம்

news-image

கொரோனா வைரஸின் தாக்கம் கோடை காலத்தில் வீழ்ச்சியடைந்து மீண்டும் குளிர்காலத்தில் அதிகரிக்கலாம் என அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த   நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பென்டகனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்  வோல்ட்டர் ரீட் இராணுவ ஆய்வு நிலையத்தின் தொற்று நோய் ஆய்வு நிலையத்தின் இயக்குநர்  நெல்சன் மைக்கல் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கும் அதனை எதிர்கொள்வதற்கான அவரச  திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் துரிதமானவையாக காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இரண்டாது சுற்று வைரஸ்தாக்கம்  குளிர்காலத்தில் மீண்டும் இடம்பெறலாம் என தெரிவித்துள்ள அவர் இதற்குள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கும் அதனை எதிர்கொள்வதற்கான அவசர  திட்டங்கள்  முழுமை பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு வகை சுவாச வைரஸ் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த வகை வைரஸ்கள் குளிர்காலத்திலேயே பாதிப்பை அதிகம் ஏற்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் போன்று செயற்படும் வெயில் அதிகரிக்க அதன் தாக்கம் குறைவடையும் எனவும் வோல்ட்டர் ரீட் இராணுவ ஆய்வு நிலையத்தின் தொற்று நோய் ஆய்வு நிலையத்தின் இயக்குநர்  நெல்சன் மைக்கல் தெரிவித்துள்ளார்.

எனினும் குளிர்காலத்தில் அது மீண்டும் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே தற்போது நாங்கள் முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாவது சுற்று தாக்கத்திலிருந்து எங்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டவை என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வைரஸ் தாக்கம் குறைவடைய தொடங்கினால் கூட நாங்கள் குளிர்காலத்தில் வரக்கூடிய இரண்டாம் சுற்றிற்கு தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.