Goldstars News
பிரதான செய்திகள்

பதிலடி கொடுக்குமா, தொடரை இழக்குமா மே.இ.தீவுகள்

news-image

மேற்­கிந்­தியத் தீவு­க­ள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தப் போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெற்று தொடரை சமநிலைப் படுத்­துமா என்­ப­துதான் அனைத்து இலங்கை ரசி­கர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

மேற்­கிந்­தயத் தீவு­க­ளுக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழு­மை­யாக வென்ற இலங்கை அணி, இரு­பதுக்கு 20 தொடரின் முத­லா­வது போட்­டியில் 25 ஓட்டங்களினால் தோல்­வி­ கண்­டது.

இந்தத் தோல்­வி­யுடன் இரண்டு போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் 1–0 என்ற அடிப்­ப­டையில் மேற்­கிந்­தி­யத் தீவுகள் முன்­னிலை பெற்­றது. 

இந் நிலையில் இந்தத் தொடரின் இரண்­டா­வதும் கடை­சி­யு­மான போட்டி இன்று இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.