Goldstars News

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி, 7 வயது சிறுமி உட்பட ஐவர் காயம்

news-image

கலிபோர்னியாவின் துலாரே கவுண்டியில் புதன்கிழமை இரவு விருந்துபசார நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

7 வயது சிறுமியொன்று உட்பட இரு யுவதிகளும், இரு இளைஞர்களும் இதன்போது காயமடைந்துள்ளதாக கலிபோர்னியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விருந்துபசார நிகழ்வில் 50 தொடக்கம் 60 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவித்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.