Goldstars News
பிரதான செய்திகள்

முதன் முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத்த இந்திய மகளிர் அணி

news-image

2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மகளிர்க்கான 7 ஆவது இருபதுக்கு - 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 

10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் முதலிடங்களை இடத்தைபெற்ற தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில், சிட்னியில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத இருந்தன. 

ஆனால், சிட்னியில் கனமழை பெய்ததால், ஆட்டம் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டது. இதனால், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்  போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் தடவையாகும்.