Goldstars News

கொரோனாவை எதிர்கொள்ள உலக வங்கி நிதி

news-image

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில், 12 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரேனா வைரசை எதிர்த்து போராடும் நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கிதலைவர் டேவில் மல்பாஸ் கூறுகையில், கொரோனாவை எதிர்த்து விரைவாகவும், திறமையாக நடவடிக்கை எடுக்க உதவுவதற்காகே நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வைரசை எதிர்த்து போராடும், ஏழைநாடுகளுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்க வேண்டியது முக்கியம். மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார சேவைக்கும் பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்