Goldstars News

தலிபானுடனான அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் அமெரிக்காவின் முதல் தாக்குதல்

news-image

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா புதன்கிழமை வான் வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கட்டார் தலைநகர் டோஹாவில் 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இந் நிலையில் அந்த ஒப்பந்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலீபானியர்களுக்கு எதிராக அமெரிக்க படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் தாக்குதல் இதுவாகும்.

தலிபான் போராளிகள் ஆப்பானிஸ்தான் தேசிய பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மீது தீவிர தாக்தலை மேற்கொண்டனர். இதன் காரணமாகவே அமெரிக்க படையினர் பதில் தாக்குதலை மேற்கொண்டதாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் சோனி லெகெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவளை தலிபானியர்களின் இந்த தாக்குதல் காரணமாக குறைந்தது 20 ‍ஆப்கானிய வீரர்களும் பொலிஸாரும் உயிரிழந்துள்ளதாக அல் அரேபியா செய்திச் சேவை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.