Goldstars News

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு

news-image

அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது. 78, 824 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபய் மாகாணத்தில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாடு தவித்து வருகிறது. அங்கு தினசரி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2788 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளாகி இருப்போரின் எண்ணிக்கையும் 78 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நெதர்லாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவிலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குரேஷியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.