Goldstars News

ஈரான் துணை அதிபரையும் தாக்கிய கொரோனா

news-image

ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் (கோவிட்-19) 50 நாடுகளில் பரவி, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,858 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். ஈரானிலும் பரவிய வைரசால் அந்நாட்டின் 7 துணை அதிபர்களில் ஒருவரான பெண்கள் மற்றும் குடும்ப விவகாரத்துறையை கவனிக்கும் மசூமே எப்டேகருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் இவரின் குழுவினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல், பார்லி.,யின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவரான மொஜ்தாபா சோல்னூரும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:தென் கொரியாவில் இதுவரை 1,262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இதுவரை 245 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹரைன், லெபனான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளில் ஈரானிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் அண்டை நாடுகள் தங்களின் எல்லையை மூடியுள்ளன.

ஐரோப்பாவில், இத்தாலியில் இதுவரை 650 பேருக்குத் தொற்று இருப்பதாகக் கண்டியறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு, 11 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.பிரான்சில் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருவர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் மொத்தம் 16 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஜப்பானில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது, 13 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவில் சுமார் 200 மில்லியன் மாணவர்களை இணையத்தின் மூலம் பாடம் பயில அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் 12 வயது மாணவர் ஒருவர் உட்பட 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் எங்கும் பயணம் மேற்கொள்ளவும் இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலும் இல்லை. அவருக்கு எவ்வாறு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரியவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அது உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையில் உள்ளது. கொரோனா வைரசைக் கண்டு அச்சம் கொள்வதற்கான நேரம் இதுவல்ல. வைரஸ் தொற்றைத் தடுத்து, உயிர்களைக் காக்க வேண்டிய நேரம் இது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசுகள் திறம்பட செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.