Goldstars News
பிரதான செய்திகள்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரினார் விளையாட்டுத்துறை அமைச்சர்

news-image

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடைலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த போட்டியை காண சென்ற ரசிகர்களுக்கு மைதானத்தின் இரண்டு நுழைவாயில்களூடாக மாத்திரம் உட்பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் போட்டி ஆரம்பமாகி சிறிது நேரம் கழித்தும் பல ரசிகர்களை மைதானத்திற்குள் நுழைய விடாது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்தனர்.

இதன் பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக நுழைவாயிலிருந்து ரசிகர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகளும், பொலிஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விளையாட்டு துறை அமைச்சர் என்ற வகையில் குறித்த தாக்குதல் சம்பவத்தை நான் வண்மையாக கண்டிக்கின்றேன். விளையாட்டு துறையை ஆதரிக்கும் மதிக்கும் நாட்டில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றமை கவலைக்குரிய விடயமாகும். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை  முன்னெடுத்து தனக்கு அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பிரத்தியேக என்னிடம் கலந்துரையாடியதுடன், உடனடியாக  இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறும் ஆலோசனை வழங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்கு துரித நடவடிக்கை முன்னெடுப்படும். எனவே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனைத்து கிரிக்கெட் இரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.