Goldstars News
பிரதான செய்திகள்

அசத்தல் - தென் ஆப்ரிக்கா

news-image

பெர்த்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவில், இங்கிலாந்து அணியுடன் நேற்று மோதிய தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாகா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் குவித்தது. நதாலியே ஸ்கிவர் 50, ஏமி ஜோன்ஸ் 23, பிரான் வில்சன் 14 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து வென்றது. கேப்டன் டேன் வான் 46, மரிஸன்னே காப் 38, குளோ டிரையன் 12, மிக்னன் டு பிரீஸ் 18* ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். டேன் வான் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.