Goldstars News
பிரதான செய்திகள்

டேவிட் வார்னர் பெருமிதம் - இந்திய ரசிகர்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன்

news-image

சிட்னி: நாங்கள் இந்தியா வருகிறோம், இந்திய ரசிகர்களை பார்க்கும் ஆவலில் உள்ளேன் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டி தொடரை விளையாடிய ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் விளையாட உள்ளது. இதற்கிடையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜன.10) நடக்கிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. முதல் போட்டி வருகிற 14ம் தேதி நடக்கிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணி நேற்று இந்தியா வருவதற்காக சிட்னியில் விமானம் ஏறியுள்ளது.

விமானத்தில் ஏறுவதற்கு முன் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனும் தொடக்க வீரருமான டேவிட் வார்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது படம் ஒன்றை போஸ்ட் செய்து ‘‘நாங்கள் இந்தியா வருகிறோம். 3 போட்டிகள் கொண்ட தொடர் சிறப்பானதாக இருக்க போகிறது. எங்களுடைய அனைத்து இந்திய ரசிகர்களையும் பார்க்க ஆவலாக உள்ளோம்’’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த முறை வார்னர் இல்லாமல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.