Goldstars News
பிரதான செய்திகள்

சிட்னி சிக்சர்ஸ் போராடி வென்றது

news-image

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதிய சிட்னி சிக்சர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அடிலெய்டில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிட்னி சிக்சர்ஸ் முதலில் பந்துவீசியது. ஸ்டிரைக்கர்ஸ் 19.4 ஓவரில் 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெதரால்டு 47 ரன் (31 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் அலெக்ஸ் கேரி 32 ரன் (30 பந்து, 3 பவுண்டரி), கேமரான் வேலன்ட் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். டாம் கரன் 3.4 ஓவரில் 22 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது. ஜேம்ஸ் வின்ஸ் 27, டாம் கரன் 21, கேப்டன் டேனியல் ஹியூஸ் 17, ஜார்டன் சில்க் 16 ரன் எடுத்தனர். ஸ்டிரைக்கர்ஸ் பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவரில் 22 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியும் சிக்சர்ஸ் வெற்றியை தடுக்க முடியவில்லை. அந்த அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.