Goldstars News
பிரதான செய்திகள்

டிரம்புடன் மோடி பேச்சு - இருநாட்டு உறவு

news-image

புதுடில்லி: இருநாட்டு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்:

நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க உறவுகள் பலத்திலிருந்து வலிமைக்கு வளர்ந்துள்ளன.
பரஸ்பர உறவில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தங்களுடன் ( டிரம்ப் ) தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு மோடி பேசியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், டிரம்பின் குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்தையும் கூறினார்.