Goldstars News
பிரதான செய்திகள்

போப் பிரான்சிஸ் - மன்னிப்பு கோரினார்

news-image

வாடிகன்:நேற்று முன்தினம், புத்தாண்டையொட்டி வாடிகன் நகரில், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, போப், பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி திரும்பும் போது, ஒரு பெண், அவர் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் சற்று நிலைகுலைந்த போப், அந்த பெண்ணின் கையை இரு தடவை தட்டினார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அந்த பெண்ணின் கையை தட்டி விட்டதற்கு, நேற்று போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். 'பல தடவை நாம் பொறுமை இழந்துவிடுகிறோம்; எனக்கும் அது நிகழ்ந்துள்ளது; என் மோசமான செயலுக்கு மன்னிப்பு கோருகிறேன்' என, போப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.