Goldstars News
பிரதான செய்திகள்

ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி - 40 ரன் வித்தியாசத்தில்

news-image

கராரா: பிரிஸ்பேன் ஹீட் அணியுடனான பிக் பாஷ் டி20 லீக் ஆட்டத்தில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 40 ரன் வித்தியாசத்தில் வென்றது. கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. பேங்க்ராப்ட் அதிகபட்சமாக 50 ரன் (42 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஜோஷ் இங்லிஸ் 27, கேப்டன் மிட்செல் மார்ஷ் 26 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 18.4 ஓவரில் 109 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், 10வது வீரராகக் களமிறங்கிய லாப்ளின் 17 ரன் மற்றும் 11வது வீரராகக் களமிறங்கிய ஜாகிர் கான் ஆட்டமிழக்காமல் 19 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெர்த் பந்துவீச்சில் பவாத் அகமது 4 ஓவரில் 16 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். மேத்யூ கெல்லி, ஆஷ்டன் ஏகார் தலா 2, ரிச்சர்ட்சன், கிறிஸ் ஜார்டன், லிவிங்ஸ்டோன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெர்த் அணி 2 புள்ளிகள் பெற்றது. பவாத் அகமது ஆட்ட நாயகன் விருது பெற்றார்.