Goldstars News
பிரதான செய்திகள்

ஓய்வு - கங்குலியால் பும்ரா

news-image

காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான் நேற்று டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் களமிறங்கினார். அதேபோல் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஜஸ்பிரீத் பும்ராவும் நேற்று குஜராத்துக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று விளையாடவில்லை. காரணம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. விரைவில் தொடங்க உள்ள இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் பும்ரா மீண்டும் அணியில் இடம் பெற உள்ளார். அதனால் ‘பும்ராவை உள்ளூர் போட்டிகளில் விளையாட வைத்து சிரமப்படுத்த வேண்டாம், அவரது ஓய்வை நீட்டித்து விடுங்கள்’ என்று கங்குலி அறிவுறுத்தியுள்ளார். அதனால்தான் அவர் ரஞ்சி தொடரில் விளையாடவில்லை.