Goldstars News

விராட் கோஹ்லி - ஸ்மித்தை நெருங்கினார்

news-image

துபாய்: டெஸ்ட் வீரர்கள் தர வரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித்தை நெருங்கியுள்ளார் விராட் கோஹ்லி. அவர் வெறும் 3 புள்ளிகள் பின்தங்கி 2வது இடத்தில் நீடிக்கிறார். இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் போட்டிக்கு பிறகான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியிலில் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆனால் அவர் 2வது டெஸ்டில் அடித்த சதம் காரணமாக புள்ளிகள் அதிகரித்துள்ளன. முதல் இடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கோஹ்லி 928 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3 இடத்திலும் நீடிக்கின்றனர். இந்தியாவின் சித்தேஸ்வர் புஜாரா, அஜிங்கிய ரஹானே முறையே 3,4வது இடத்தில் தொடர்கின்றனர்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய மயங்க் அகர்வால் முதல் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளார். காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காத ஜஸ்பிரீத் பும்ரா பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருந்து  5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இளஞ்சிவப்பு டெஸ்டில் பந்து வீச வாய்ப்பு கிடைக்காத அஸ்வின் ரவிசந்திரன் தொடர்ந்து 10வது இடத்தில் நீடிக்கிறார். இந்தப்பட்டியலில் ஆஸியின் பாட் கம்மின்ஸ், தெ.ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா, நியூசிலாந்தின் நெயில் வாங்னர் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். ரவீந்திர ஜடஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் 15, 17, 21வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

ஆல்ரவுண்டர் பட்டியலில் வெ.இண்டீசின் ஜாசன் ஹோல்டர், இந்தியாவின் ரவீந்திர ஜடஜா, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முதல் 3 இடங்களில் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் உள்ள இன்னொரு இந்தியர் அஸ்வின் 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அணிகளை பொறுத்தவரை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த 2 இடங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் உள்ளன.