Goldstars News
பிரதான செய்திகள்

பகோடா,கொலம்பியாவில் குண்டுவெடிப்பு

news-image

பகோடா, கொலம்பியாவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 போலீசார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாண்டாண்டர் நகரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 3 போலீசார் பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இக்குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதி கொலம்பியாவில் கடத்தல் தொழில்கள் நடைபெறும் முக்கிய பகுதி என்று போலீசார் தெரிவித்தனர்.நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் கொலம்பியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.நவ.21ல் நடந்த போராட்டத்தில் சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கொலம்பியாவின் பல இடங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன