Goldstars News

100-வது ரஞ்சி ஆட்டத்தில் விளையாடும் இரு வீரர்கள்

news-image

ரஞ்சிப் போட்டி 1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, இந்த சீசனில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 7 அணிகளுடன் மொத்தம் 37 அணிகள் களம் காண்கின்றன.  புதிதாகக் களம் காணும் மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிஸோரம், உத்தரகண்ட், சிக்கிம், நாகாலாந்து, மேகாலயம், பிகார், புதுச்சேரி ஆகிய அணிகள் சமீபத்தில் நிறைவடைந்த விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்றிருந்தன.

கடந்த வருடம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன்மூலமாக 7 முறை சாம்பியனான தில்லியை வென்று தனது முதல் ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது விதர்பா.

இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள ரஞ்சிப் போட்டியில் அபிஷேக் நாயரும் வினய் குமாரும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். நாகபுரியில் விதர்பாவுக்கு எதிராக கர்நாடகா அணிக்குத் தலைமை தாங்கியுள்ள வினய் குமாரும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் மேகாலயாவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் புதுச்சேரி அணிக்காக  விளையாடத் தொடங்கியுள்ள அபிஷேக் நாயரும் தங்களுடைய 100-வது ரஞ்சிப் போட்டியை விளையாடியுள்ளார்கள்.  

கர்நாடக வீரர்களில் இதற்கு முன்பு சுனில் ஜோஷியும் பிரிஜேஷ் படேலும் 100 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளார்கள். 100-வது ரஞ்சி ஆட்டத்தை விளையாடியுள்ள 3-வது கர்நாடக வீரர், வினய் குமார். இதற்கு முன்பு விளையாடிய 99 ஆட்டங்களிலும் மும்பை அணிக்காக விளையாடிய அபிஷேக் நாயர், தனது 100-வது ஆட்டத்தில் ரஞ்சி வீரராகக் களமிறங்கியுள்ளார்.