Goldstars News
பிரதான செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

news-image

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இம்முறை ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கவுள்ளது.

இந்திய அணி அதிகபட்சமாக 6 முறை ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் தொடரை வென்றுள்ளன. 

இந்நிலையில், ஆசியக் கோப்பை 2018 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள் நிலையில், சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

16 பேர் கொண்ட இந்திய அணியின் விவரம் பின்வருமாறு, 

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவன் (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பட்டி ராயுடு, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.